வரும் ஜனவரிக்குள் ஸ்மார்ட் கார்டாக மாறுகிறது ரேசன் கார்டு. தமிழக அரசு தீவிரம்

ration cardதமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ரேசன் கார்டுகளில் உள்தாள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரேசன் கார்டுகள் அனைத்தையும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணியில் தமிழக அரசு தற்போது தீவிரமாக உள்ளது. வரும் ஜனவரி முதல் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் இதன்மூலம் ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

‘ஸ்மார்ட்’ கார்டுகளை பயன்படுத்தி பொருள் வாங்கியதும், குடும்பத்தினரின் செல்போனுக்கு அது சம்பந்தமான எஸ்.எம்.எஸ். வந்துவிடும். அதில் பொருளின் எடையளவு போன்ற விபரங்கள் இருக்கும். அதோடு, போலி அட்டைகளை ஒழித்து விடலாம். தகுதியுடைய ஒவ்வொருவரும் விட்டு விடப்படாமல் ‘ஸ்மார்ட்’ அட்டையை பெற்றுவிட முடியும். இதற்காக குடும்ப அட்டை விபரங்களுடன் ஆதார் எண்களை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 13 மாவட்டங்களில் ஆதார் எண் குடும்பஅட்டைதாரர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.

“முதல் கட்டமாக 13 மாவட்டங்களில் நடக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளது. அதன் பின்னர் சென்னை உட்பட மீதமுள்ள மாவட்டங்களில் இந்தப் பணிகள் தொடங்கும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் சென்னையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி குடும்ப அட்டையின் கால அளவை ஒவ்வொரு ஆண்டாக நீட்டித்து வருகிறோம். ஆனால் இந்த முறை குடும்ப அட்டையின் கால அளவை அந்த முறையில் நீட்டிக்க வாய்ப்பு இருக்காது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *