shadow

3000 டாஸ்மாக் கடைகள் மூடியும் ரூ.1000 கோடி அதிகரித்த வருமானம்

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3321 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் அப்படி இருந்தும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ.1,149.97 கோடி அதிகரித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தமிழக முதல்வர் பதவியில் கடந்த மே மாதம் மீண்டும் ஜெயலலிதா அமர்ந்தப்போது 500 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டார். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் 500 டாஸ்மாக் கடைகளை அகற்றினார். மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நெடுஞ்சாலை அருகேயிருந்த 2321டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

ஆக மொத்தம் 3321 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் அடைக்கப்பட்டிருந்தும் 2016-17 ஆம் ஆண்டில், 26 ஆயிரத்து 995.25 கோடி ரூபாய் வருவாய் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது. இந்த தொகை கடந்த 2015-2016 ஆண்டைவிட ரூ.1,149.97 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதிலிருந்து மதுக்கடைகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாகவும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் தெரிய வருகிறது.

Leave a Reply