shadow

பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசையால் தமிழக அரசின் இணையதளம் முடக்கமா?

hackசமீபத்தில் பாகிஸ்தானின் நாட்டிற்குள் புகுந்து சர்ஜிக்கல் தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்திய நிலையில் இதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்தியாவின் முக்கிய இணையதளங்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம் www.tn.gov.in என்ற இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்புக்களும் , மாநிலம் அரசு குறித்து முக்கிய தகவல்களும் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலுள்ள மிக முக்கிய பக்கங்களை பார்வையிட முடியவில்லை என்றும் அந்தப் பக்கங்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் காட்சி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பக்கங்கள் முடக்கப்பட்டு, அவற்றில் PAK CYBER SKULLZ என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு பாகிஸ்தான் ஹேக்கர்கள் காரணமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தமிழக அரசின் இணையதளப் பக்கங்களில் “பாகிஸ்தான் சைபர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கி இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Leave a Reply