shadow

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு. எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றிய தமிழக அரசு
tasmac
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என திமுக உள்பட அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி போராட்டங்கள் என நடத்தி வரும் நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றியது போல் உள்ளதாக எதிர்க்கட்சிகயை சேர்ந்தவர்கள் கருத்து கூறி வருகின்றனர்..

சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்து பேசியதாவது:

மதுபானங்கள் அதிகமாக விற்கப்பட்டதால் விற்பனை தொகை அதிகரிக்கவில்லை. மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக அதிரித்துள்ளது. மதுபான கடைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. கடந்த திமுக ஆட்சியில் இருந்த அளவிற்கே மதுபான கடைகளின் எண்ணிக்கை உள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் 7 ஆயிரத்து 152 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 530 விற்பனையாளர்கள் மற்றும் 3 ஆயிரத்து 734 உதவியாளர்களும் பணியாற்றுகி்னறனர். இவர்களுக்கான தொகுப்பூதியம் கடந்தநான் ஆண்டுகளில் உயர்த்தப்பட்டது.

இந்தாண்டும், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கான மாத தொகுப்பு ஊதியம் ரூ.500, 400 மற்றும் 300 உயர்த்தி வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு இந்தாண்டு செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும். இதற்கு ஆண்டு ஒன்றிற்கு கூடுதலாக ரூ.13.09 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட ரூ.1 கோடி நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறு வாழ்வுக்கு ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்

இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

Leave a Reply