shadow

vijayakanthதேமுதிகவை கூட்டணியில் வளைக்க காங்கிரஸ்-பாஜக போட்டா போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் வரவுள்ள நிலையில் கூட்டணி அமைப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நலக்கூட்டணி என அனைத்து கட்சிகளும் விஜயகாந்தின் தேமுதிகவை வளைக்கவே முதல்கட்ட முயற்சியை எடுத்து வருகின்றன.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக சேருமா? அல்லது திமுக மற்றும் பாஜக கூட்டணியில் தேமுதிக சேருமா? என்பது குறித்துதான் தற்போது கேள்வி எழுந்துள்ளது. மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்று தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் மற்றும், தமிழக தேர்தல் முன்னேற்பாடுகளை கவனிக்கும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் விரைவில் சந்தித்து பேசவுள்ளதாகவும் இந்த சந்திப்புக்காக இந்த வாரத்தில் பிரகாஷ் ஜவடேகரும், பியுஷ் கோயலும் சென்னை வந்து தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் நேரடியாக ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதே நேரத்தில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்க குலாம் நபி ஆசாத் தமிழகம் வரவிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தேமுதிகவை திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வரும் பொறுப்பை திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸிடம் விட்டுவிட்டதாகவும், தமிழகம் வரும் குலாம் நபி ஆசாத், விஜயகாந்துடன் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Chennai Today News: TN Election 2016: Political parties starts their work

Leave a Reply