shadow

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். ராஜினாமா? புதிய தலைவர் குஷ்புவா?

kushbooதமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து அதற்கான விளக்கம் கூற அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெல்லி சென்றிருந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, இளங்கோவனை சந்திக்க மறுத்ததை அடுத்து ராகுல்காந்தியை மட்டும் சந்தித்துவிட்டு இளங்கோவன் திரும்பினார். ராகுல் காந்தியும் இளங்கோவன் மீது அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இளங்கோவனின் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படும் என்ற நிலையில் அவரே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு விரைவில் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம், குஷ்பு, தங்கபாலு உள்பட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் குஷ்புவுக்கு இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply