முதல்வர் ஜெயலலிதா எழுந்து நடப்பது எப்போது? பிரதாப் ரெட்டி தகவல்

jayalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர சிகிச்சை வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டதாக செய்திகள் வெளிவந்தபோதிலும் இந்த செய்தியை அதிமுகவினர் மட்டுமே கூறி வந்தனர். தமிழக அரசிடம் இருந்தோ அல்லது அப்பல்லோ நிர்வாகத்திடம் இருந்தோ எவ்வித தகவல்களும் இதுகுறித்து வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது முதல்வர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதை அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி உறுதி செய்துள்ளார். சென்னை தரமணியில் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஜெயலலிதாவின் அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்படுகின்றன.

ஜெயலலிதாவின் உடலுக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதால் இயல்பு நிலைக்கு அவர் திரும்பியுள்ளார். வழக்கமான உணவுகளை அவர் எடுத்துக் கொள்கிறார். இனி அவர் எழுந்துநடப்பதுதான் அடுத்த கட்ட நிலையாகும். இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *