shadow

jayalalitha copyநாடாளுமன்றத் தேர்தலில் முதல்வரே எதிர்பார்க்காத் நிலையில் 39-க்கு 37 தொகுதிகளைக் கைப்பற்றியதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்திவிட்டால், தற்போது கிடைத்த வாக்குகளை அப்படியே அள்ளிவிடலாம் என்று நினைப்பதாக கூறப்படுகிறது.  

எம்.ஜி.ஆர் இறந்தபின்னர் தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக, திமுக என மாறி மாறித்தான் ஆட்சியை பிடித்துள்ளன. அந்த கணக்குப்படி பார்த்தால் வரும் 2016ஆம் ஆண்டு திமுகதான் ஆட்சியை கைப்பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாராளுமன்றத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றுள்ளதால் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தலை வைத்தால், அதிமுகவுக்கு கணிசமான தொகுதிகள் அதாவது 234 தொகுதிகளில் 217 தொகுதிகள் வரை கூட்டணியின்றி தனித்து கிடைக்க வாய்ப்பு உள்ளதாககூறப்படுகிறது.

தற்போது அதிமுக ஆட்சிக்கு எதிராக இருக்கும் ஒரே விஷயம் மின்பற்றாக்குறை ஒன்றுதான். அதையும் மத்தியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள மோடியின் உதவியால் வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டால், மிக எளிதாக சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதுதான் தற்போதைய கணிப்பு. இலங்கை பிரச்சனை முதல் முல்லைப்பெரியாறு பிரச்சனை வரை ஜெயலலிதாவின் எண்ணப்படியே நடந்து வருவதால் முதல்வரின் கணக்கு கண்டிப்பாக நனவாகக்கூடியதுதான் என்பதே அனைவரும் கணிப்பாக இருக்கின்றது.

Leave a Reply