shadow

vijay100

நடிகர் விஜய்யை ‘நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா? என்று கேள்வி கேட்ட நபருக்கும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அதன் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கை  ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி you tube இணையதளத்தில் விஜய் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் தமுமுக உறுப்பினர் ஒருவர் பேசியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நேரத்தில் சர்ச்சைக்குரிய விதமாக விஜய் குறித்து கருத்து தெரிவித்ததால் தமிழக முஸ்லீம் முன்னேற கழகத்திற்கு பலவித புகார் வந்தது. இதனால் இதுகுறித்து தமுமுக  தலைவர் ஜே.எஸ். ரிபாயி இன்று விளக்கம் அளித்துள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1iJBU6G” standard=”//www.youtube.com/v/LnrB5KU2TFs?fs=1″ vars=”ytid=LnrB5KU2TFs&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2529″ /]

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்  you tube இணைய தளத்தில் நடிகர் விஜய் பற்றி தரக் குறைவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர் பேசி உள்ளார் என பலர் நம்மை தொடர்பு கொண்டு பலர் தெரிவித்தனர். அதன் அடிப்படையில்  you tube இணைய தளத்தை ஆய்வு செய்தபோது நடிகர் விஜய் குறித்து அவதூறாக பேசியவருக்கும் தமுமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இதுபோன்ற பேச்சுகளை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது, இதுபோன்ற அவதூறான பேச்சுகளை சமூக வலை தளங்களிலோ,  இணையதளத்திலோ எழுதவோ,  பேசவோ கூடாது என்பதை தமுமுக தலைமை தமது தலைமை நிர்வாகிகள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அநாகரிகமான விமர்சனங்களுக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். அது வேறு ஒரு இயக்கத்தின் சார்பில் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த இயக்கத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Reply