shadow

வாசன், வேல்முருகனிடம் ஜெயலலிதா இன்று பேச்சுவார்த்தை. கூட்டணியில் இடம் கிடைக்குமா?
g.k vasan notice
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே திடீரென சமீபத்தில் 227 தொகுதிகளுக்குமான அதிமுக வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.

இருப்பினும் வேட்பாளர்கள் ஒருசிலர் மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தமிழக வாழுவுரிமை கட்சி ஆகிய தலைவர்களுண்ட இன்று ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர்களுக்கான தொகுதிகள் இன்று முடிவாகும் என்றும் கூறப்படுகிறது.

த.மா.காவுக்கு 15 இடங்களும், த.வா.கவுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 227 பேர் அடங்கிய அதிமுக வேட்பாளர்களில் ஏற்கனவே 4 முறை மாற்றம் செய்த ஜெயலலிதா மீண்டும் இன்று மாற்றம் செய்துள்ளார்.  பென்னாகரத்தில் வேலுமணிக்கு  பதிலாக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமியும் வேப்பனஹள்ளியில் கே.பி முனுசாமிக்கு பதிலாக மது என்கிற ஹேம்நாத் அவர்களும் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

வேட்பாளர் பட்டியல் மாற்றம் நடந்துகொண்டே இருப்பது நேர்காணலில் தேர்வாகாதவர்கள் இன்னும் சென்னையிலேயே தங்கி உள்ளனர். தங்களுடைய பெயர் புதிய வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுமா? என்பதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Reply