shadow

டைட்டானிக் கப்பலின் கடைசி மெனு கார்ட் 5.82 கோடி ரூபாய்க்கு ஏலம்

menuகடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத் ஹாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தை துவக்கிய உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக், பனிப்பாறை மீது மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த பயணிகள், கப்பல் ஊழியர்கள், கேப்டன் உள்பட மொத்தம் 1,503 பேர் பலியாகினர். உலகின் மிக துயரமான சம்பவங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘டைட்டானிக்’ என்ற திரைப்படம் ஹலைவுட்டில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டது.

இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முதல் நாள் முதல் வகுப்பு பயணிகளுக்கு பரிமாறப்பட்ட மெனு கார்ட்களில் ஒன்று, டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து, பின்னர் லைப் போட் மூலம் தப்பித்த ஆபிரகாம் லிங்கன் சாலமன் என்ற பயணியிடம் இருந்தது. இந்தமெனு கார்டை ஏலம் விடப்போவதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த மெனு கார்டு தற்போது ஆல்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த மெனு கார்டை 5,82,000 பவுண்ட்களுக்கு அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 5 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். ஏலம் எடுத்த நபரின் பெயர் மற்றும் முகவரியை ஏலம் நடத்திய நிறுவனம் செய்தியாளர்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டது.

Leave a Reply