shadow

titanicகடந்த 1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்த பொருட்கள் பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளன. இங்கிலாந்து நாட்டில் உள்ள வில்ட்ஷயர் என்ற இடத்தில் சமீபத்தில் டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நடந்த ஏலத்தில், டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டன. உலகின் பல நாடுகளில் இருந்து வந்திருந்த பல செல்வந்தர்கள் இந்த பொருட்களை ஏலம் எடுக்க போட்டி போட்டனர்.
 
இதில் கப்பலின் ரெஸ்டாரெண்ட்டில் உள்ள உணவு மெனு அட்டை ஒன்று மீட்கபட்டது. இந்த உணவு மெனு அட்டை சுமார் 60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது.. பயணி ஒருவரின் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
 
டைட்டானிக் பொருட்களை வாங்க, உலகெங்கிலிருந்தும் ஏராளமானோர் விரும்பியதாக ஏலத்தை நடத்திய ஆண்ட்ரூ அல்ட்ரிட்ஜ் என்பவர் மகிழ்சியுடன் கூறியுள்ளார்.

1912 ஆம் ஆண்டு சுற்றுலாவை தொடங்கிய டைட்டானிக் கப்பல், பனி மலை மீது மோதி கடலில் மூழ்கியது. இதில் சுமார் 1,500 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply