வீடு தேடிவரும் காய்கறிகள்: திருப்பூர் கலெக்டர் அதிரடி

வீடு தேடிவரும் காய்கறிகள்ள்: திருப்பூர் கலெக்டர் அதிரடி

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து மளிகை மற்றும் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் வெளியே வந்து கொண்டிருப்பதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் இதற்கு தீர்வு கண்டுள்ளார்

ரூபாய் 30 ,ரூபாய் 50 மற்றும் ரூபாய் 100 தொகுப்பில் மூன்று வகையான காய்கறி தொகுப்புகள் வீட்டிற்கே கொண்டுவந்து கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்

ரூபாய் 30 தொகுப்பில் 100 கிராம் கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் மற்றும் 250 கிராம் தக்காளி, பீட்ரூட், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா மற்றும் முருங்கை கீரை ஒரு கட்டு தரப்படும்

50 ரூபாய் தொகுப்பில் 100 கிராம் கத்தரிக்காய், மிளகாய், பாகற்காய் மற்றும் 250 கிராம் வெண்டைக்காயை, தக்காளி, புடலங்காய், பீட்ரூட், கருவேப்பிலை, கொத்தமல்லி, பீர்க்கங்காய், புதினா, மற்றும் ஒரு முருங்கை கீரை ஒரு கட்டு ஆகியவை தரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்

அதே போல் 100 ரூபாய் தொகுப்பில் 100 கிராம் கேரட், பீன்ஸ், 500 கிராம் தக்காளி, 250 கிராம் கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவைகளும், பீர்க்கங்காய், பீட்ரூட் மற்றும் முருங்கைக்கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, ஆகியவை தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

காய்கறிகள் வேண்டுவோர் போன் செய்தாலே அவருடைய வீட்டிற்கு தேவையான காய்கறி வந்து அடையும் என்றும் போன் நம்பர்கள் விபரங்களையும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் திருப்பூர் மாவட்ட மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இதேபோல் சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்ட ஆட்சியர்களும் ஏற்பாடு செய்தால் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.