திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் பக்தர்களால் காணிக்கை செலுத்தப்படும் தலைமுடிகள் அடிக்கடி ஏலம் விடுவது வழக்கம். அதுபோல 146 டன்கள் தலைமுடிகள் வரும் 30ஆம் தேதி ஏலம் விடப்படும் என்றும் ஏலம் எடுக்க விரும்புவர்கள் ஆன்லைனில் ஏலம் எடுக்கலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வரை சென்ற வருடத்தில் மட்டும் எட்டு முறை 1472 டன்கள் வரை தலைமுடிகள் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், இதில் 5400 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் ஏலம் விடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது முதல் உலகம் முழுவதிலும் இருந்து அதிக தொகைக்கு பலர் ஏலம் கேட்கின்றனர் என்றும், வரும் 30ஆம் தேதி நடக்கவிருக்கும் ஏலத்தில் சுமார் 80 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply