shadow

baburajசீமாந்திராவில் தெலுங்கு தேச கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன்  முந்தைய காங்கிரஸ் அரசு நியமித்த அனைத்து கோவில்களின் அறங்காவலர் குழுக்களையும் ரத்து செய்ய முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அறங்காவலர் குழுவின் தலைவராக இருப்பவர்கள் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தப்பட்டனர். அனைத்து கோவில்களின் அறங்காவலர் குழுவின் தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில்  திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபுராஜ் ராஜினாமா செய்ய மறுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய பாபுராஜ், “இந்த பதவி எனக்கு ஏழுமலையான் கொடுத்த வரப்பிரசாதம். இந்த பதவியை ஏற்கும் போது எனது உயிர் இருக்கும் வரை கடவுளுக்கு சேவை செய்வதாக ஏழுமலையான் முன்பு சத்தியம் செய்து பதவியேற்றேன் அதனால் நானாக இந்த பதவியில் இருந்து விலகினால் அது ஏழுமலையானுக்கு செய்யும் துரோகம் ஆகும். அதே நேரத்தில் எனது பதவியை அரசாங்கம் பறித்துக் கொண்டால் அதுகுறித்து கவலைப்பட மாட்டேன். என்னை நீக்கினால் அதன் தண்டனையை ஆளும் கட்சியினரையே சேரும். அதுவரை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

Leave a Reply