shadow

tirupatiஇலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றபின்னர் முதன்முதலாக இந்தியாவிற்கு வந்த அதிபர் சிறிசேனா மைத்ரிபாலா சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்ய வந்தபோது ஒருசில அபசகுனம் நிகழ்ந்ததாக கூறப்படுவதால் பெரும் ஏற்பட்டது.

திருப்பதி கோவிலில் தினம்தோறும் அதிகாலை 1 மணியளவில் ஏகாந்தசேவை நடத்தப்பட்டு கோயில் நடை சாத்தப்படும். பின்னர் இரவு 2.15 மணியளவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை நடைபெறும். அதனைத்தொடர்ந்து தோமாலை சேவை, அர்ச்சனை, வாரந்திர சேவைகள், விஐபி பிரேக் தரிசனம் முடிந்தபிறகு சர்வ தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இலங்கை அதிபர் சிறிசேன தனது மனைவி ஜெயந்தியுடன் நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்திருந்தனர். இதையடுத்து  இன்று அதிகாலை 2.15 மணியளவில் அர்ச்சகர்கள், மூலவர் சன்னதி அருகே ஜெயபேரி, விஜயபேரி சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக்கதவின் பூட்டுகளை  திறக்க முயன்றனர்.

அப்போது சாவி திடீரென உடைந்ததால் பூட்டு திறக்கவில்லை. இதுகுறித்து தலைமை செயல் அதிகாரி சாம்பசிவராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் தேவஸ்தான கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ரெட்டிக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் ஊழியர்கள் கோயிலுக்கு விரைந்து வந்து வெல்டிங் மூலம் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

இதையடுத்து சுப்ரபாத சேவை தொடங்கியது. இதன்பிறகு சிறிசேன, சுவாமி தரிசனம் செய்தார். இதனால் சுப்ரபாத சேவையில் சுமார் 20 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது. தங்கக்கதவின் சாவி உடைந்த சம்பவம் ஒருபுறம் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறிசேன மற்றும் அவருடன் வந்தவர்கள் இதனை அபசகுனமாக கருதியதால், அவர்களது முகங்கள் வாடியது. அதே சமயம் தங்க கதவு சாவி உடைந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறுமோ என்று பக்தர்கள் மத்தியிலும் அச்சம் நிலவியது.

Leave a Reply