shadow

திப்புசுல்தான் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறீர்கள்? கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

1ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் தேதி கர்நாடக அரசு திப்புசுல்தான் பிறந்த நாளை திப்பு ஜெயந்தி என்ற விழாவாக கொண்டாடி வரும் நிலையில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என, பாஜக மற்றும் இந்துத்துவ கட்சிகளும், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திப்பு சுல்தான் சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை என்றும், அவரது பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்றும் கர்நாடகா அரசுக்கு, அம்மாநில ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

மைசூரு சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தான், தனது பாதுகாப்பிற்காக பல இன மக்களையும் கொன்றுகுவித்தஅவர் என்றும் அவரை சுதந்திரப் போராட்ட வீரர் என, கர்நாடகா அரசு கொண்டாடுவது ஏற்புடையதல்ல என்றும் இந்த வழக்கில் வாதாடப்பட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது திப்பு சுல்தான் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதற்கான ஆதாரத்தை கர்நாடக அரசு அளிக்க வேண்டும் என்றும்,. மன்னராட்சியை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்ட நபரை, சுதந்திரப் போராட்ட வீரர் எனக் கூறி, விழா கொண்டாடுவது ஏன் என்ற விளக்கத்தை கர்நாடகா அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply