shadow

p58aவாஷ்பேஸின் மங்கலாக இருந்தால்,  அதன் மீது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் தடவி, சில நிமிடங்கள்  கழித்து, ஒரு சுத்தமான துணி அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்தால், வாஷ்பேஸின் பளிச்சென்று ஆகிவிடும்.
 
சீப்புபுகளின் இடுக்குகளில் அழுக்கு சேர்ந்திருந்தால் அப்படியே சுத்தம் செய்யாதீர்கள்.  முதலில் சீப்புகளை சோப்புக் கரைசலில் ஊறப்போடுங்கள். சில நிமிடங்களுக்குப் பின் ஒரு டூத் பிரஷ்ஷால் தேய்த்தால், சீப்பில் இருந்து அழுக்கு சுலபமாக நீங்கி விடும். சீப்பிலும் கீறல் விழாது.
 
உங்கள் கைவிரலில் மோதிரம் டைட்டாக இறுகிவிட்டதா? ஒன் றிரண்டு ஐஸ் கியூப்களை அந்த விரலின்மேல் ஒரு நிமிடம் தேயுங்கள். கையில் வலியின்றி, மோதிரம் மெள்ள கழன்றுவிடும்.
 

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது முதலில் சிறிது கடலை மாவை எண்ணெயில் வறுத்துவிட்டு, கிழங்கைப் போட்டால் ரோஸ்ட் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

 

வருடம் முழுவதும் மாங்காய்த் தொக்கு சாப்பிட விருப்பமா? இரண்டு மூன்று பெரிய மாங்காய்களை தோல் சீவி துருவி, அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காயவைத்து,  பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது அதிலிருந்து சிறிது எடுத்து வெந்நீரில் ஊறவைத்து வழக்கம்போல தொக்கு செய்துகொள்ளலாம்.

 

ஒரு கப் தண்ணீரில் 4 தேக் கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து `மைக்ரோவேவ் அவன்’ உள்ளே ஐந்து நிமிடம் வைத்து எடுங்கள். இப்படி செய்வதால் `அவன்’-ன் உள்ளே இருக்கும் துர்நாற்றம் நீங்கி விடும்.

Leave a Reply