shadow

first crimeஇங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்து பகுதியில் கன்னா என்ற குட்டித்தீவு உள்ளது. மொத்த மக்கள்தொகை 26 பேர்கள் மட்டுமே உள்ள இந்த ஊரில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எந்தவித குற்றங்களும் நடந்தது இல்லை. கடைசியாக கடந்த 1960ஆம் ஆண்டு ஒரே ஒரு திருட்டு சம்பவம் நடந்தது. அதன்பின்னர் இந்த நகரில் இதுவரை கொலை, கொள்ளை,திருட்டு என எதுவுமே நடந்தது இல்லை.

மக்கள் தொகை மிகவும் குறைவு என்பதால் இங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு பூட்டு போடுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக இந்த தீவில் தற்போது ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பகுதியில் ஸ்டீவர்ட் கான்னர் என்பவருடன் இணைந்து மெக்கேப் என்பவர் நடத்தி வந்த கடையை உடைத்து அங்கிருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இனிப்பு பண்டங்கள், மளிகை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த கடை வழிப்போக்கர்களுக்காக நடத்தப்பட்டு வந்தது. இங்கு இலவச WiFi- மற்றும் 24 மணிநெரமும் டீ, காபி கிடைக்கும் என்பதால் எப்போதுமே இந்த கடை திறந்தே இருக்கும். கடையில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதன் மூலம் தாங்கள் திவாலாகி விட்டதாக கடை உரிமையாளர்கள் வருத்தத்துடன் கூறினர். இந்த கொள்ளை குறித்து விசாரிக்க ஒரு போலீஸ் அதிகாரி அங்கு சென்றுள்ளார்.

Leave a Reply