இன்று 73வது குடியரசு தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்

இன்று நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

இந்தியா கடந்த 1950ஆம் ஆண்டு குடியரசு நாடாக மாறியது. இந்த நிலையில் இன்று 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது

சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் ஆளுநர் கேஎன் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.