10சென்னை மாநகரப்பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதத்தொகையாக ரூ.1 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகமாவதாக மாநகராட்சி பேருந்து அதிகாரிகளுக்கு வந்த தகவலின்படி கடந்த வெள்ளிக்கிழமை திடீரென 85 அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

புரசைவாக்கம், சிம்சன், கிண்டி, கோயம்பேடு, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் போன்ற இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் 652 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1 லட்சம் வரை அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டு எச்சரிக்கை செய்தனர்.

டீசல் விலை உயர்வால் மாநகராட்சி பேருந்து கழகத்தின் நிதி நிலைமை மோசமாகி வரும் நிலையில் டிக்கெட் இல்லாமல் பயணம்செய்யும் பயணிகள் அதிகரித்து வருவதால் மேலும் நஷ்டம் உண்டாகிறது என்றும், எனவே பயணிகள் அனைவரும் டிக்கெட்டுக்களை சரியாக எடுத்து மாநகர பேருந்து கழகத்தின் நிதி நிலைமைக்கு உதவும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *