shadow

ஒரே நாளில் நடிகர் சதீஷின் 3 படங்கள் ரிலீஸ்

sathieshவரும் அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தில் மூன்று முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, விஜய்சேதுபதியின் ‘றெக்க’, மற்றும் பிரபுதேவா, தமன்னாவின் ‘தேவி’ ஆகிய மூன்று படங்களும் ஒரே நாளில் வெளிவரவுள்ள நிலையில் இந்த மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த மூன்று படங்களிலும் காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ளார் என்பதே அந்த ஒரு அபூர்வ ஒற்றுமை. இந்த மூன்று படங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் மூன்றுமே வெற்றி பெற்றால் சதீஷின் மார்க்கெட் மிக வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சதீஷ் தற்போது இளையதளபதி விஜய்யுடன் ‘பைரவா’, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்டசிவா கெட்டசிவா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply