ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக மேலும் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா

ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக மேலும் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக மேலும் 3 எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பதவி விலகினார்கள். அவர்கள் தங்கள் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜோதிராதித்யா சிந்தியாபுக்கு ஆதரவாக மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது

விரைவில் ஜோதிராதித்யா சிந்தியா முதல்வராவார் என்றும் அவருக்கு பாஜக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.