shadow

உலக நாயகன் படம் கோவையில் செய்த புதிய சாதனை
thoongavanam 2
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு கமல் ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களிடம் இருந்தும் எழுந்துள்ள நிலையில் இந்த படம் கோவையில் ஒரு மிகப்பெரிய சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரிமியர் காட்சி என்று கூறப்படும் ஸ்பெஷல் காட்சிகள் இதுவரை எந்த படத்திற்கும் கோவையில் திரையிடப்பட்டதில்லை. ஆனால் முதன்முதலாக கோவை சென்ட்ரல் திரையரங்கில் இன்று இரவு ஒன்பது மணிக்கு ‘தூங்காவனம்’ படத்தின் பிரிமியர் காட்சி திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவட்ந்ஹுள்ளது.

இதுவரையில் பத்திக்கையாளர்களுக்கு மட்டுமே பிரிமியர் காட்சி, ரிலீஸுக்கு முந்தைய தினம் நடத்தப்பட்ட நிலையில் இன்று கோவையில் துாங்காவனம் திரைப்படத்திற்கு பிரத்யேகமாக ரசிகர்களுக்காக பிரிமியர் ஷோ திரையிடுவது துாங்காவனம் படத்தின் சாதனையை குறிப்பிடுகிறது.

Leave a Reply