shadow

‘ஜோக்கர்’ இயக்குனரை பாராட்டிய தொல்.திருமாவளவன்

jokerபிரபல எழுத்தாள்ர் ராஜூமுருகன் இயக்கிய குக்கூ’ திரைப்படம் வெற்றி கொடுத்த தைரியத்தில் அவர் இயக்கிய இரண்டாவது படமான ‘ஜோக்கர்’ கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைத்து ஊடகங்களிலும் பாராட்டுக்களை பெற்றது. சமூக வலைத்தளங்களிலும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்ததால் இயக்குனர் ராஜூமுருகன் உள்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்து, இயக்குனர் ராஜூமுருகனுக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

படம் முழுவதும் அரசியலையும், அரசியல்வாதிகளையும் நய்யாண்டி செய்து உருவாக்கப்பட்ட ஒரு படத்திற்கு ஒரு பிரபல அரசியல்வாதி பாராட்டு தெரிவித்துள்ளதை கோலிவுட் திரையுலகம் ஆச்சரிய பார்வையுடன் பார்த்து வருகின்றன.

குருசோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைத்துள்ளார். ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ‘குக்கூ’ படம் போலவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply