shadow

தனுஷின் ‘தொடரி’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

dhanushதனுஷ் நடித்துள்ள கொடி, ‘தொடரி’ ஆகிய திரைப்படங்களின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் என்ற நிலை உள்ளது. மேலும் ‘தொடரி’ படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளதால் தற்போது இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி ‘தொடரி’ படத்தின் ஒரு நிமிட டீசர் மற்றும் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பிரபுசாலமன் இயக்கியிருக்கும் இந்த பிரமாண்டமான படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷ், கீர்த்திசுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன, தம்பிராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவும், எல்.வி.கே தாஸ் படத்தொகுப்பும் செய்த இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Leave a Reply