கோடி கோடியாய் சொத்துக்களை குவிக்கின்றாரா அமித்ஷா?

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் சொத்துக்கள் கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.

பத்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று எம்.பி. காலி இடங்களும் அடங்கும்.

இந்த மூன்று தொகுதிகளில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ஸ்மிரிதி இராணி மற்றும் ராஜ்புட் ஆகியோர் போட்டியிருக்கின்றனர். இதற்காக மூவரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அமித் ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்துக்களின் மதிப்பு 5 ஆண்டுகளில் மடமடவென உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு அமித் ஷாவின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 1.90 கோடி. 2017ஆம் ஆண்டில் இது 19 கோடியாக அதிகரித்துவிட்டது.

மொத்தமாக அமித் ஷா மற்றும் அவரது மனைவி வசம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு இப்போது 34.31 கோடி. இதுவே, 2012ஆம் ஆண்டில் வெறும் 8.54 கோடியாக இருந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே அவரது சொத்து மதிப்பு 300 சதவீதம் அதிகமாகயுள்ளது.

இவரைப் போலவே ஸ்மிரிதி இராணியின் சொத்து மதிப்பும் கடந்த மூன்று ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. 2014ஆம் ஆண்டில் 4.91 கோடியாக இருந்த ஸ்மிரிதி இராணியின் சொத்து மதிப்பு இப்போது, 8.88 கோடியாக எகிறியுள்ளது.

இதுமட்டுமல்ல, 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தபோது, டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம். பட்டம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருந்தார் ஸ்மிரிதி இராணி. இப்போது, தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் மூன்று ஆண்டுகள் பி.காம். பட்டத்தை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது, அகமதாபாத் நானாபுரா தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அமித் ஷா மாநிலங்களைவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. பதவி பெற்றுவிட்டால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *