குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாது: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறப்பது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த 6 ஆண்டுகலாக அணை குறுவை சாகுபடிக்காக திறக்கப்படாத நிலையில் இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘: “குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்றும், அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க இயலாது என்றும் கூறியுள்ளது பெரும் ஏமாற்றமாக விவசாயிகளுக்கு உள்ளது.

மேலும் மேட்டூர் அணையின் இப்போதைய நீர் வரத்து குறித்த தகவலை பார்த்தால் இந்த அணையில் நீர்வரத்து வினாடிக்கு 2,594 கன அடியில் இருந்து 2,190 கன அடியாகக் குறைந்துவிட்டது. மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 39.42 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 11.79 டி.எம்.சி ஆகவும் உள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *