shadow

காலியாகிறது தேமுதிக கூடாரம். தேமுதிக வேட்பாளர் உள்பட 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

dmkநடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவிடம் பேரம் படியாததால் வேறு வழியின்றி மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக படுதோல்வி அடைந்தது. தேமுதிகவில் இருந்து பிரிந்து சென்ற மக்கள் தேமுதிகவை கேவலமாக தேமுதிக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில் இனி தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என்றும், கூடிய விரைவில் தேமுதிக கட்சி கலைக்கப்படும் என்று தேமுதிக தொண்டர்களே கவலையுடன் கூறி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் மாற்று கட்சியை நோக்கி செல்ல தொடங்கிவிட்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.வினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்து அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை பொன்னாடை அணிவித்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

தி.மு.க.வில் இணைந்த ஏ.வி.ஆறுமுகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் திருவொற்றியூர், மாதவரம், மணலி பகுதிகளை சேர்ந்த கணேஷ், ராஜா, கோபால், ஜி.எஸ்.ராமன், ஏ.பி.சேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் சேர்ந்துள்ளனர். இன்னும் பல தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு தாவுவதற்கு தயாராக இருப்பதாகவும் தேமுதிகவின் கூடாரம் மிக விரைவில் காலியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply