shadow

Angalamman

தல சிறப்பு:

நோயில் இருந்து குணம் பெற வேண்டும் என்று கொழுக்கட்டையில் அம்மனின் உருவம் பிடித்து, அதனை சூறை விட்டு வேண்டிக் கொள்வது இங்கே சிறப்பு.

பொது தகவல்:

திண்டிவனம் அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ.. அந்தப் பலன்கள் இங்கே, இந்தத் தலத்திலும் கிடைக்கும் எனப் போற்றுகின்றனர்.

பிரார்த்தனை:

விரும்பிய வரன் அமையவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், குழந்தைச் செல்வம் பெறவும், நோயில் இருந்து குணம் பெறவும், கடன் பிரச்னை, கணவன்-மனைவி உறவில் சிக்கல் தீரவும், எதிரிகள் தொல்லை விலகவும் பக்தர்கள் இங்குள்ள அம்மனை பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், தொடர்ந்து ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வந்து, செவ்வரளி மாலை அல்லது எலுமிச்சை மாலை சார்த்தியும், கொழுக்கட்டையில் அம்மன் உருவம் பிடித்தும், தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

TN_20140609164522879441

தலபெருமை:

பெண்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், தொடர்ந்து ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வந்து, அம்மனுக்கு செவ்வரளி மாலை அல்லது எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால்.. விரைவில் விரும்பியபடி வரன் அமையும்; தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்! பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் இங்கு வந்து, அம்மனைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், குழந்தைச் செல்வம் கிடைக்கப் பெறுவார்கள் என்று போற்றுகின்றனர் பெண்கள். நோயில் இருந்து குணம் பெற வேண்டும் என்று கொழுக்கட்டையில் அம்மனின் உருவம் பிடித்து, அதனை சூறை விட்டு வேண்டிக் கொள்வதும் இங்கே சிறப்பு.

தல வரலாறு:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஓலைக் குடிசையில் அம்மனை வைத்து வழிபடத் துவங்கினார்கள். பிறகு காலப்போக்கில், குடிசையாக இருந்த கோயில், அழகிய, பிரமாண்டக் கட்டடமாக வளர்ந்திருக்கிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: நோயில் இருந்து குணம் பெற வேண்டும் என்று கொழுக்கட்டையில் அம்மனின் உருவம் பிடித்து, அதனை சூறை விட்டு வேண்டிக் கொள்வதும் இங்கே சிறப்பு. 

Leave a Reply