shadow

1

மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா ருத்ர யாகம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு பெற்றது. சப்த விடங்க தலம் மற்றும் சக்தி பீடங்களுள் ஒன்றாக திகழும் இக்கோவிலில் கடைசி யாக கடந்த 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில்களில் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி தியாகராஜர் கோவிலில் மீண்டும் கும்பா பிஷேகம் நடத்த திட்டமிடப் பட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் (நவம் பர்) 8-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மண்டலாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷே கம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதை முன் னிட்டு 4 கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்று முன்தினம் யாக பூஜைகள் தொடங்கின. நேற்று கோவி லில் வன்மீகநாதருக்கு மகா ருத்ரயாகம் நடைபெற்றது. இதில் 111 சிவசாரியார்கள் ஒருசேர வேத மந்திரங்களை கூறி, யாகம் செய்தனர். அதை தொடர்ந்து பரிவார தெய்வங் களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, சோமகுலாம் பாள் வன்மீகநாதர், கொண்டியம்மன் உடனாகிய தியாகராஜர், கமலாம்பாள், நீலோத்பாலாம்பாள், அசலேஷ்வரர், சித்தீஷ்வரர், ஆனந்தீஷ்வரர் உள்ளிட்ட பிரதான சன்னதிகளில் இன்று மண்டாலாபிஷேகம் நடை பெறுகிறது.

Leave a Reply