shadow

நடிகர் ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசர். அரசியல் பேசினார்களா?

rajinithirunavuசமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர், முன்னணி அரசியல் கட்சி தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல கட்சிகளின் தலைவர்களையும் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வரும் திருநாவுக்கரசர் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். அப்போது, அவருக்கு ரஜினிகாந்த் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை என்றும், நட்பு அடிப்படையில் அவரை சந்தித்தேன் என்றும் விளக்கம் அளித்தார்.

Leave a Reply