shadow

திமுகவிடம் ஆதரவு கேட்ட பாஜக: திருநாவுக்கரசர் கருத்து

பாஜக சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நேற்று முன் தினம் முறைப்படி அறிவிக்கப்பட்டார். இவருக்காக பாஜக தலைமை காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளிலும் ஆதரவு கேட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு கேட்டாலும் திமுக அவர்களுக்கு ஆதரவு தராது. மேலும் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறிய அவர் ஆர்எஸ்எஸ் நபரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்ப பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply