.திருமாவளவன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

கடந்த மாதம் முதலே அரசியல் கட்சி தலைவர்கள் மரணம் அடைந்தும், உடல்நலக்கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கருணாநிதி, வாஜ்பாய் போன்ற முக்கிய தலைவர்கள் மரணம் அடைந்தனர். மேலும் விஜயகாந்த் உள்பட ஒருசில அரசியல்வாதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 56 வயதான அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

திருமாவளவன் அவர்கள் உடல் ஒவ்வாமை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *