shadow

Tamil-Daily-News-Paper_2414165735245

கேரளா மாநிலம், கோட்டயம் அருகில் உள்ளது குமாரநல்லூர் என்னும் தலம். இங்கு திருமணத் தடை நீக்கும் பகவதி அம்மன் ஆலயம் அமைந்திருக்கிறது. நீண்ட காலமாகத் திருமணமாகாமல் இருப்பவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். நீண்ட காலமாகத் திருமணமாகாமல் இருப்பவர்கள், தங்களுடைய திருமணத் தடையை நீக்க வேண்டி அம்மனுக்குச் ‘சுயம்வர புஷ்பாஞ்சலி’ எனும் வழிபாட்டினைச் செய்து விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக் கொள்கின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள பகவதி அம்மன் கன்னி தெய்வமாக இருப்பதாக ஐதீகம்.

எனவே ‘மஞ்சள் நீராட்டு’ எனும் சிறப்பு வழிபாடு செய்து, குழந்தைப்பேறு கிடைக்கவும், குழந்தைகளின் கல்வி சிறக்கவும், குழந்தைகள் நோயின்றி வாழவும் வேண்டிக் கொள்கின்றனர். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கி, கணவன்-மனைவி ஒற்றுமையுடன் வாழ பட்டுச்சேலை, தாலி போன்றவைகளை அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வேண்டுதல் செய்கின்றனர். தங்கள் கணவர் அதிக காலம் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகப் பெண்கள் இங்கு மஞ்சள் வழிபாடு செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

Leave a Reply