shadow

kudankulamநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளை ஏற்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக பாபா அணு ஆராய்ச்சி மைய டைரக்டர் சேகர் பாசு கூறியுள்ளார்.

இன்று காலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர் பாசு, “கூடங்குளத்தில் முதலாவது அணு உலை தன்னுடைய முழு உற்பத்தி திறனை எட்டிவிட்டது என்றும் 2வது அணு உலை தன்னுடைய முழு உற்பத்தி திறனை இன்னும் சில நாட்களில் எட்டி விடும் என்று கூறினார்.

மேலும் இந்தியாவில் அமைக்கப்படும் அனைத்து அணு மின் நிலையங்களும் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் ஏற்பட்ட விபத்து, வெப்ப நீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவுக்கும் அணு உலைக்கும் தொடர்பு இல்லை. இதுதவிர கல்பாக்கத்திலும் அதிவேக அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் நகரில் தலா 700 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைப்பதற்கான பணிகளும், கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply