ஓபிஎஸ் அணியில் இணைந்தார் திலகவதி ஐபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரியாதை நிமித்தமாக சந்தித்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி இன்று ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.

முதலமைச்சராக இருந்த போது ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டதாகவும், ஓய்வுக்கு பின்னர் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளதாகவும் திலகவதி தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திலகவதி ஐபிஎஸ் ஓபிஎஸ் அணியின் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் ஏற்கனவே தீபா போட்டியிடவுள்ள நிலையில் திலகவதி என்ற பெண் வேட்பாளரும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *