shadow

அதர்வாவின் ‘கணிதன்’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் குவியப்போவது ஏன்?
kanithan
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ படத்தின் டீசர் கடந்த 4ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. இந்த டீசர் இதுவரை இல்லாத அளவில் விஜய் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை நிகழ்த்தியது. இந்நிலையில் இதுவரை யூடியூபில் ‘தெறி’க்க வைத்த இந்த படத்தின் டீசர் வரும் 26ஆம் தேதி முதல் திரையரங்குகளிலும் தெறிக்க உள்ளது.

‘தெறி’ படத்தை தயாரித்துள்ள கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இன்னொரு படமான ‘கணிதன்’ திரைப்படம் பிப்ரவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் இடைவேளையில் விஜய்யின் ‘தெறி’ டீசர் திரையிடப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ‘கணிதன்’ படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் குவிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வரும் மார்ச் 5ஆம் தேதி ‘தெறி’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா  சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் இதுக்குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில்
விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்..

Leave a Reply