shadow

விஜய்யின் ‘தெறி’ படத்தின் ஏழு பாடல்கள் விபரம்.
theri
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசை வெளியீடு வரும் ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள சத்யம் திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விறுவிறுப்பாக செய்து வரும் நிலையில் இன்று காலை இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளிவந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் ஐம்பதாவது படமான இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளது. கவிஞர் கபிலன் மட்டும் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். மீதியுள்ள ஐந்து பாடல்களையும் ஐந்து வெவ்வேறு கவிஞர்கள் எழுதியுள்ளனர். ஆக மொத்தம் ஆறு பாடலாசிரியர்கள் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளனர். விஜய்யின் முந்தைய படமான ‘புலி’ படத்தில் அனைத்து பாடல்களையும் கவியரசு வைரமுத்துதான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது

இனி இந்த படத்தின் டிராக் லிஸ்ட்டை பார்ப்போம்.

1. ‘ஜித்து ஜில்லா’டி என்ற விஜய் அறிமுகமாகும் பாடலை பிரபல இசையமைப்பாளர் தேவா, பாலசந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர். ராகேஷ் இந்த பாடலை எழுதியுள்ளார்.

2. ‘என் ஜீவன்’ என்று தொடங்கும் என்ற பாடலை கவிஞர் நா.முத்துகுமார் எழுத அதை ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்.

3. ஈனா மீனா டீக்கா’ என்ற பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இந்த பாடலை உத்ரா உன்னிகிருஷ்ணன், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.

4. செல்லக்குட்டியே என்று தொடங்கும் பாடலை கபிலன் எழுதியுள்ளார். இதை விஜய் மற்றும் நீதிமோகன் பாடியுள்ளனர்.

5. ‘தாய்மை’ என்று தொடங்கும் பாடல் ஒன்றை பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார். இந்த பாடலை எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுதிய புலவர் புலமைப்பித்தன் எழுதியுள்ளார்.

6. ராங்கு ராங்கு.. என்று தொடங்கும் அதிரடி குத்துப்பாடலை டி.ராஜேந்தர், ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் சோனு கக்கார் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார்.

7. டப் தெறி டப் என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியுள்ளார்.

Leave a Reply