shadow

‘தெறி’ டீசரை திடீரென காணவில்லை? விஜய் ரசிகர்கள் பரபரப்பு
theri
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் டீசர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகியது. டீசர் வெளியான ஒருசில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களும், லைக்குகளும் குவிந்தன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் இருந்த நிலையில் திடீரென டீசர் வெளியான யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் ‘தெறி’ டீசரை பார்க்க முடியாமல் உள்ளது. இதற்கான சரியான காரணம் தெரியாமல் விஜய் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

‘தெறி’ படத்தின் அட்டகாசமான டீசர், ஜி.வி.பிரகாஷின் அபாரமான பின்னணி இசையுடன் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டீசர் மற்ற படங்களின் டீசர் சாதனைகளை குறிப்பாக அஜித்தின் ‘வேதாளம்’ டீசரை வெகுவிரைவில் மிஞ்சிவிடும் என்று இருந்த நிலையில் திடீரென ‘தெறி’ டீசர் காணாமல் போயுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘தெறி’ படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் அவர்களின் கைவண்ணத்தில் 50 வினாடிகள் டீசரில் பல அதிரடி காட்சிகள் இணைக்கப்பட்டு ஒரு ஆக்சன் விருந்தாக விஜய் ரசிகர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி உள்பட நான்கு வித்தியாசமான கெட்டப்புடன் விஜய் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply