shadow

‘தெறி’ டீசர் வெளியாகும் தேதி
theri
இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய்யின் 59வது படமான ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பொங்கல் தினத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் விறுவிறுப்பாக தயாராகி வருவதாகவும், இன்னும் பத்து நாட்களில் இந்த படத்தின் டீசரை வெளியிட இயக்குனர் அட்லி முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

50 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் விஜய்யின் கம்பீரமான போலீஸ் கெட்டப் மற்றும் சமந்தா, எமிஜாக்சனின் காட்சிகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் விரைவில் இசை வெளியீடு குறித்த தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார்,இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply