shadow

டுவிட்டரில் டிரெண்ட் ஆகிய ‘தெறி’ டீசர் வெளியாகும் தேதி
theri
இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

சமீபத்தில் நியூஸ் 7′ சேனலுக்கு பேட்டியளித்த ‘தெறி’ படத்தின் இயக்குனர் அட்லி, இந்த படத்தின் டீசர் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த படத்தின் டீசர் தயாரிக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த டீசர் சென்சாருக்கு அனுப்பப்படும் என்றும், பிப்ரவரி 5ஆம் தேதி விஜய் ரசிகர்களை மகிழ்விக்க இந்த படத்தின் டீசர் கண்டிப்பாக வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #theriteaserfromfeb5  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டுக்கு கொண்டு வந்துகொண்டுள்ளனர். ஐ.பி.எஸ் அதிகாரியாக விஜய்யும், டாக்டராக சமந்தாவும் நடித்துள்ள இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்யின் டிரைவராக நடித்துள்ள மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.theri-song theri1_2698488f theri theri_144957202800 theri-marriage

theri2 theri2 theri1 theri

Leave a Reply