shadow

தெறி: விஜய்யின் பெண் ரசிகைகளுக்காக மகளிர் மட்டும் சிறப்பு காட்சி
theri ladies special show
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தீவிர விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். நாளை முதல் இந்த படத்திற்கான ரிசர்வேஷன் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் ஆண் ரசிகர்களை போலவே பெண் ரசிகைகளும் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்தாலும்,அவர்களால் முண்டியடித்து கொண்டு டிக்கெட் வாங்க முடியாத சூழல் உள்ளது.

அப்படியே டிக்கெட் எடுத்து சென்றாலும் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியில் பெண்கள் அமைதியாக உட்கார்ந்து படம் பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே.

இந்த பிரச்சனையை தவிர்க்கும் பொருட்டு காரைக்குடி சத்தியன் திரையரங்கில் பெண்களுக்கு என சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி காலை 7 மணிக்கு இந்த பெண்கள் காட்சி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்ற நகரங்களிலும் பெண்களுக்காக சிறப்பு காட்சி இருந்தால் பெண் ரசிகைகளும் நிம்மதியாக படம் பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply