shadow

தெறி: சென்னையில் ரூ.1 கோடி வசூல் செய்த முதல் படம்
theri
இளைதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக நல்ல வசூலை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் 20 திரையரங்க வளாகங்களில் வெளியான இந்த படம் ரூ. 1 கோடிக்கும் அதிகமான வச்சுலை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுவரை எந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் சென்னையில் இந்த தொகையை வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வெளியான ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் ரூ.84 லட்சங்கள் வசூல் செய்ததே சென்னையில் அதிகபட்சமான முதல் நாள் வசூல் என்ற சாதனை இருந்து வந்த நிலையில் அந்த சாதனையை நேற்று ‘தெறி’ உடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நேற்று முன் தினம் திரையிடப்பட்ட பிரிமியர் காட்சிகளில் மட்டும் 251,000 டாலர்கள் வசூல் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளில் எந்திரன் மற்றும் லிங்கா ஆகிய படங்கள் மட்டுமே 250,000 டாலர்கள் வசூலை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனையில் தெறியும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

theri-1 theri-3 1-theri 16020122462556-Theri_Movie_Teaser_Release theri  theri1_2698488f theri2

Leave a Reply