shadow

janatha pariwarகடந்த 15 ஆம் தேதி சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாதி ஜனதா ஆகிய 6 கட்சிகள் ஒன்றிணைந்து ‘ஜனதா பரிவார்’ என்ற பெயரில் புதிய கட்சி உருவாகியது. கட்சி ஆரம்பித்த நான்கே நாட்களில் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கட்சி நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்றும் கூறப்படுகிறது.

ஜனதா பரிவார் என்ற கட்சி தொடங்கியவுடன் அந்த கட்சியின் மாநிலங்களவை தலைவராக சரத்யாதவ் அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக முலாயம்சிங் யாதவின் சகோதரரான ராம்கோபால் யாதவ் அப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறிய கிரோன்மாய் நந்தா என்பவர், “ஒன்றிணைந்த கட்சியின் மாநிலங்களவை தலைவராக அதில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்த ஒரு மூத்த உறுப்பினர் அமர்த்தப்பட வேண்டும். சரத் யாதவ் ஒரு மூத்த உறுப்பினர் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் அவரை விட அதிக காலம் மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்து வருபவர் ராம்கோபால். எனவே அவரையே மாநிலங்களவைத் தலைவராக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இருப்பினும், இது தனது தனிப்பட்ட கருத்து தவிர, அதன் மீது கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply