shadow

namithaநடிகை நமீதா விரைவில் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்து அவர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

தன்னுடைய திருமணம் குறித்து தான் எவ்வித அறிவிப்பும் இதுவரை செய்யவில்லை என்றும் தானாக எழுந்து வரும் வதந்திகளுக்கு தான் பொறுப்பில்லை என்றும் கூறிய நமீதா, கல்யாணம் என்ற பேச்சுக்கே எனது எண்ணத்தில் இடமில்லை. மக்கள் பணியில் என்னை இணைத்துக்கொள்ளவே எண்ணம். அதற்கான நேரத்திற்காக காத்திருக்கேன்.

மேலும் எப்போதும் எனக்கு ஆதரவளித்து வரும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இனியும் அதே அன்போடு தொடர கேட்டுக்கொள்கிறேன்.