shadow

கூட்டணி ஆட்சி இல்லை. திமுக தனித்தே ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின்
02stalin1
தமிழகத்தில் உள்ள ஒருசில கட்சிகளில் ஆட்சியில் பங்கு வேண்டும், கூட்டணி ஆட்சிதான் சிறந்த ஆட்சியாக இருக்கும் என வலியுறுத்தி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் பங்கு கேட்கலாம் என நினைத்த பல கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கூட்டணி ஆட்சி குறித்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று சில கட்சிகள்தான் கூறி வருகின்றன. தமிழக அரசியலில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்தகைய கட்சிகள் இந்த கோரிக்கையை விடுத்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள், கூட்டணி அமைச்சரவையை ஒருபோதும் விரும்புவதில்லை. ஒரு கட்சி ஆட்சியையே தமிழக மக்கள் விம்புவார்கள்.

1980 தேர்தலில் கூட்டணி அமைச்சரவை திட்டத்துடன் தி.மு.க.வும் காங்கிரசும் சம அளவில் தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டன. ஆனால், அதை தமிழக மக்கள் ஏற்கவில்லை. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டு மக்கள் மனதில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். ஒரு போதும் கூட்டணி அமைச்சரவை வராது” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் உள்பட சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply