shadow

parthibanநடிகரும் இயக்குனருமாகிய பார்த்திபன் காவல்துறையினர் உதவியோடு நேற்று சென்னை பர்மா பஜாரில் திருட்டு டிவிடி சோதனையை அதிரடியாக நடத்தினார். இந்த சோதனையில் 25ஆயிரத்துக்கும் அதிகமான திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படத்தை இயக்கி, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட பார்த்திபன், இந்த படத்தின் திருட்டு விசிடி சென்னை பர்மா பஜாரில் விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து, அவர் போலீஸார் துணையுடன் அதிரடி சோதனை நடத்தினார். இரண்டு வெவ்வேறு கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் அஞ்சான், கதை திரைக்கதை வசனம் இயக்கம், சினேகாவின் காதலர்கள் உள்ளிட்ட படங்களின் திருட்டு டிவிடிக்கள் 25 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்னைக்காக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் தனது படம் வெளியிடும் நேரத்தில் மட்டுமின்றி இனிமேல்திருட்டு டிவிடி-க்களைக் கண்டுபிடிக்கக் காவல் துறையினருடன் இணைந்து தொடர்ந்து சோதனையில் ஈடுபடப்போவதாகவும்  நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

Leave a Reply