தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் மூடல்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தவிப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகம் முழுவதும் 960 திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் அந்த திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் தற்போது திண்டாட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஒரே இடத்தில் அதிகம் நபர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் திரையரங்குகள் மால்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது

இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது 960 திரை அரங்கங்களில் மார்ச் 31 வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக திரையரங்கு ஊழியர்கள் உள்பட சினிமா தொழிலாளர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் கடும் அவதியில் உள்ளனர்

எனினும் பொதுமக்கள் உயிர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது என்பதும், இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நிச்சயம் ஒத்துழைப்பு கொடுத்து ஆக வேண்டிய நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply