shadow

shadow

உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலகிலேயே மிக நீளமான புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள விமானப்படை வீரர் ஒருவர் தன்னுடைய மிகவும் சக்தி வாய்ந்த கேமராவின் மூலம் ஒரு புகைப்படத்தை எடுத்தார். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தின் நீளம் 107 அடி ஆகும். இதன் உயரம் 31 அடி ஆகும். இந்த மிகப்பெரிய புகைப்படத்தை அவர் பணிபுரியும் விமானப்படை தளத்தில் அரசு அனுமதி பெற்று வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை உலகின் மிகப்பெரிய கேமரா என்று கின்னஸ் சாதனை ஏற்படுத்திய கேமராவில் இருந்து எடுத்ததாகவும், அந்த வீரர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த புகைப்படமும் விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது.

Leave a Reply